• Apr 27 2024

பஸ் வசதி இல்லாத கிராமத்தில் கோவில் கட்டிய விஜய்... இதுவரை யாருக்குமே தெரிந்திராத உண்மை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 66 ஆவது படமாக 'வாரிசு' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பணிகள் யாவும் விறு விறுப்பாக நடைபெற்று வருவதோடு 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தினை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். எனினும் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழுவே 'தளபதி 67' வெளியிடுவார்கள் என்று படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு முறையும் நேர்காணலின் போது கூறி வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் 'வாரிசு' படம் வெளியாவதில் உள்ள சிக்கல் குறித்து பேசுவதற்காக பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார் விஜய். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் செம வைரலானது.

மேலும் இந்த சந்திப்பிற்கு வந்த விஜய்யின் ரசிகர் ஒருவர் பேசுகையில் "எங்களுடைய கிராமம் மிக சிறுது. எங்களுடைய கிராமத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது, தெரு வசதியும் கிடையாது. ஆனாலும் எங்கள் கிராமத்திற்கு விஜய் வந்தார். கொஞ்ச நேரம் எங்களுடன் இருந்துவிட்டு தான் சென்றார்" எனக் கூறியுள்ளார். 


அதுமட்டுமல்லாது எங்கள் ஊருக்கு அன்னதானம் எல்லாம் அவர் செய்துள்ளார். எங்கள் ஊரில் பிறக்கும் அதிகளவான குழந்தைகளுக்கு விஜய் அண்ணாவின் படங்களுடைய பெயர்களை தான் வைக்கிறோம். அப்படி அவர் மேல் வெறித்தனமான ரசிகர்களாக நாங்கள் இருக்கிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "எங்கள் ஊருக்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார் விஜய். அதுமட்டுமின்றி முதன் முதலில் விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்தது எங்கள் கிராமத்தில் தான் " எனவும் அந்த ரசிகர் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement