• Apr 27 2024

களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட பிக்பாஸ் பிரபலம்- அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின்,திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் காயத்ரி ரகுராம். இவர் இதனைத் தொடர்ந்து பரசுராம், விசில், வை ராஜா வை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர நடன இயக்குநராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.படவாய்ப்புக் குறைந்ததை அடுத்து தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். 


இந்நிலையில் தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் இது தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்குகொண்டு ஓவியாவுக்கு எதிராக நடந்து கொண்டதால் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement