• May 06 2024

பிம்பிலிகி பிலாப்பி பாடலின் வீடியோ ப்ரோமோ ரிலீஸ்- மரியாவுடன் வேற லெவலில் குத்தாட்டம் போடும் சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன்.அவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றுள்ளன.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய டான், டாக்டர் ஆகிய திரைப்பங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இவரை முன்னணி நடிகராக உயர்த்தியுள்ளது. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையெ அதிகமாகக் காணப்படுகின்றது.


அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. அனுதீப் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாகவெளிநாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். 

 இப்படத்தில் இடம்பெறும் 2 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன. அதில் அனிருத் பாடிய பிம்பிலிகி பிலாப்பி பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், அந்த பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 அதில் நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை மரியாவும் சேர்ந்து வேறலெவலில் குத்தாட்டம் போடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement