• Sep 28 2025

தனுஷின் இயக்கத்தில் "இட்லி கடை" முதல் பாடலை வெளியிட்ட படக்குழு..! வைரலாகும் வீடியோ...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது திரைப்படம் ‘இட்லி கடை’, அவர் நடித்த 52-வது படமாகும்.Dawn Pictures தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளதுடன், பிரபல நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதைசுருக்கம் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகாத போதும், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்கனவே உருவாகி விட்டது.

இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 27ம் தேதி படத்தின் முதல் பாடல் (ஃபர்ஸ்ட் சிங்கிள்) வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வெளியாகி சில மணி நேரங்களுக்குள் இணையதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement