• Sep 07 2024

ரஜினி, சூர்யா.. விட்டுக்கொடுப்பது யார்? தீவிர பேச்சுவார்த்தை..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ மற்றும் சூர்யா நடித்த ’கங்குவா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டு வரும் நிலையில் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தை அக்டோபர் 10ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தில் வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் தீபாவளி அன்று அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை வெளியிட முடியாது என்பதால் அக்டோபர் 10ஆம் தேதி ’வேட்டையன்’ வெளியாவது உறுதி என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10 ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ’வேட்டையன்’ படமும் பின்வாங்குவதாக இல்லை என்று தான் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இரண்டுமே பெரிய பட்ஜெட் படம் என்பதால் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் வசூல் பாதிக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ரஜினி மற்றும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருவரில் இருவரில் யாராவது ஒருவர் 15 நாட்கள் தங்கள் படத்தை தள்ளிப் போட உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இரண்டில் ஒரு படத்தை 15 நாட்கள் தள்ளி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விநியோகிஸ்தர் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுத்து வந்தாலும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுமே அக்டோபர் 10ஆம் தேதியை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதில் ஏதேனும் மாற்றம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement