• Sep 27 2023

இன்ஸ்பெக்டருடன் வெண்ணிலாவிற்கு திருமணம்... ஷிவானியைக் கரம்பிடிக்கும் சூர்யா... பரபரப்பான திருப்பங்களுடன் 'காற்றுக்கென்ன வேலி'..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.


மேலும் இந்த சீரியல் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 

அதில் சூர்யாவும் வெண்ணிலாவும் மணக் கோலத்தில் நிற்கின்றனர். ஆனால் வெண்ணிலாவிற்கு அவரின் தந்தை பார்த்த மாப்பிள்ளையுடன் கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றது. அதேபோன்று சூர்யாவிற்கு ஷிவானியுடன் கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றது.


இருப்பினும் சூர்யா, வெண்ணிலா இருவருமே மிகுந்த குழப்பத்துடன் மணமேடையில் நிற்கின்றனர். எனவே இறுதியில் யாருடன் யாருக்கு திருமணம் நடக்கின்றது என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement