• May 06 2024

பாரதி, கண்ணம்மாவைக் காதலிப்பதை அறிந்து கொண்ட வெண்பா- செளந்தர்யா எடுத்த அதிரடி முடிவு- வெளியாகிய ப்ரோமோ

stella / 10 months ago

Advertisement

Listen News!



விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் பாரதியின் காதலுக்கு கண்ணம்மா ஓகே சொல்லி விட்டார்.

ஆனால் எதிர்பாராத விதமாக வெண்பாவின் சூழ்ச்சியால் வெண்பாவுக்கும் பாரதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இப்படியான நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் கண்ணம்மாவுக்காக பாரதி வரைந்திருக்கும் சித்திரக் கொப்பியை பாரதி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த வெண்பா அந்த சித்திரத்தை எடுத்து பார்க்கின்றார். அதில் ஐ லவ் யூ கண்ணம்மா என்று எழுதியிருப்பதை பார்த்த வெண்பா அதிர்ச்சியடைந்ததோடு அந்த கொப்பியை தன்னுடைய அம்மாவிடம் கொண்டு போய் காட்டுகின்றார்.

அவர் அதை சௌந்தர்யாவிடம் காட்டி விட்டு அப்பவே எங்களுக்கு தெரியும் பாரதி வெண்பாவைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டான் என்று தெரியும். நாங்க இப்பவே வீட்டை விட்டு போறோம் என்று ஷர்மிளா நாடகம் போடுகின்றார்.

இதனால் கடுப்பான செந்தர்யா வெண்பாவுக்கும் பாரதிக்கும் இன்டைக்கே கல்யாணம் நடக்கும் என்று கூறுகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement