• May 04 2024

வெளியாக முன்னரே வியாபாரத்தில் சாதனை படைத்து வரும் வாரிசு- ஆரம்பமே துணிவு படத்திற்கு சரி இல்லையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

ரசிகர்களின் மிகுந்த பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.ஆனால் வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும்  ஒரே நாளில் திரைக்கு வர இருக்கிறது.


இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் மோதினாலும் வியாபாரத்தில் சாதனை படைத்து வருகிறதாம் வாரிசு. ஆம், வாரிசு திரைப்படம் பல இடங்களில் இதுவரை இல்லாத விலைக்கு விற்கப்பட்டு வருகிறதாம் என்று கூறப்படுகின்றது. இதனால் தளபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

மேலும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement