• May 01 2024

அம்பிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய வனிதா... அதுவும் இப்படி ஒரு புகைப்படத்தின் மூலமாகவா..? கலாய்க்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்துப் பிரபல்யமான ஒருவரே நடிகை அம்பிகா. இவர் தமிழ் சினிமாவில் 1979- இல் வெளிவந்த 'சக்கரவர்த்தி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் 1997-ஆம் ஆண்டிலிருந்து படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகின்றார்.



மேலும் இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாயகி' என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் 'ஜோடி நம்பர்.1', ஜீ தொலைக்காட்சியில் 'ஜீ டான்ஸ் லீக்', 'டான்சிங் கில்லாட்டிஸ்' போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.



இவரைப் போன்றே இவருடைய சகோதரி ராதாவும், சிவாஜி முதல் ரஜினி வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவ்வாறாக திரைத்துறையை பின்னணியாக கொண்ட குடும்பத்திலிருந்து வந்த அம்பிகா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதற்குப் பல பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமாரின் வாழ்த்துப் பதிவானது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது அம்பிகாவுடன் கூட இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அதற்கு கீழே "ஹாப்பி பேர்த் டே அக்கா" எனக் குறிப்பிட்டு இருக்கின்றார். அதுமட்டுமல்லாது அப்புகைப்படத்தில் வனிதா மிகவும் கவர்ச்சிகரமான உடையணிந்து இருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement