• Sep 27 2023

வாயில சிகரெட் - திட்டி தீர்த்த ரசிகர்கள் - தக்க பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

வனிதா விஜய்குமார் தற்போது இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி தோட்டா என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு வனிதா புகைப்பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.


வனிதா தம் அடிக்கும் போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் வனிதாவை திட்டி தீர்த்தனர். அதுமட்டுமில்லாமல் ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த், குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்து இருந்தால், நான் இப்போது இருப்பதைவிட இன்னும் உயரத்தில் இருந்து இருப்பேன். இதனால் குடிக்கு அடிமையாகாதீர்கள் என்று பேசி இருந்தார். ரஜினி சொன்னதை வைத்தும், வனிதா புகைப்பிடித்த போட்டோவை வைத்தும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.


இந்நிலையில், வனிதா அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது,செய்தியாளர்கள் தம் அடிக்கும் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த வனிதா, நான் ஒரு நடிகை என்பதால், கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்தேன். அது நடிப்பு. இதை பார்த்துவிட்டு நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

காலம் மாறுகிறது, பெண்கள் தம் அடிப்பது, தண்ணியடிப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். தனிப்பட்ட விஷயத்தை மற்றவர்கள் சர்ச்சையாக்க தேவையில்லை. நிஜ வாழ்க்கையில் அனைவரும் குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று சொல்வார்கள். ஆனால், சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால், சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் ஒன்றாக இணைக்காதீர்கள். நடிகர்கள் படங்களில் புகை பிடிப்பதை வரவேற்கிறீர்கள். ஆனால், அதே நடிகைகள் செய்தால் சர்ச்சையாக்குகிறார்கள் என்று அதிரடியான பதில் அடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வனிதா

Advertisement

Advertisement

Advertisement