• Sep 27 2023

மனைவி நிஷாவுக்கு வளைகாப்பு நடத்திய பிக் பாஸ் கணேஷ்...! குவியும் வாழ்த்துக்கள்..! Viral Photos!!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கணேஷ். இதையடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, பனித்துளி, உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் கணேஷ். இந்நிகழ்ச்சியில் நேர்மையின் சிகரமாக இருந்த அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். பைனலில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார்.


இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு வீட்டிலேயே சிம்பிளாக வளைகாப்பு நடத்தி இருக்கிறார் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் .

இந்த பதிவிற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அத்துடன் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement