• May 18 2024

எதுக்குடி பாடுறதுக்குள்ள அடிக்கிறீங்க... குறும்படம் போடுங்க... கோபத்தில் டென்ஷனாகி பிரியங்காவிடம் கத்திய வனிதா..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.

இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்தவகையில் தற்போது வனிதா அவர்கள், பிரியங்கா நடத்தி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். இதில் வனிதாவுடன் ஐஸ்வர்யா, சிங்கப்பூர் தீபன், சரத் ஆகியோரும் வந்துள்ளனர். 


இந்த நிலையில் இந்த ஷோவில் வனிதா ஒரு பாடலை தவறாக பாட அவரது முகத்தில் உடனடியாக ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதனால் கடுப்பான வனிதா "நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீங்க" என்று சொல்லி பிரியங்காவிடம் கோபப்பட்டார்.

அதுமட்டுமல்லாது "எனக்கு குறும்படம் போடுங்கள்" என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement