• May 04 2024

அடேங்கப்பா..300 கோடி வசூல் கிளப்பில் இணைந்த வாரிசு! ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை ஆரவாரத்தோடு கொண்டாடி வருகிறார்கள்.

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்திருந்த திரைப்படம் 'வாரிசு'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பொங்கல் விருந்தாக ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

 படம் வெளியாக முதலே, ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும்.. மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்தாலும் வாரிசு திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

மேலும் வாரிசு திரைப்படம் வெளியான இதே நாளில், நடிகர் அஜித்... வினோத் இயக்கத்தில் நடித்த 'துணிவு' திரைப்படமும் வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில், இரண்டு படங்களும் மூன்று வாரத்திற்கு மேல் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே துணிவு திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது வாரிசு திரைப்படமும் உலக அளவில் 300 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை தளபதியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement