• May 10 2024

வாத்தி திரைப்பட இயக்குநருக்கு நடந்த திருமணம்- வித்தியாசமான உடையில் சென்ற கீர்த்தி சுரேஷ்- தனுஷ் வரவில்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

2000ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சினேக கீதம் படத்தில் கதையாசிரியராக பணியாற்றிய இயக்குநர் வெங்கி அட்லூரி அந்த படத்தில் நடித்தும் இருந்தார்.தொடர்ந்து கடந்த 2018ல் வெளியான தோழி பிரேமா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானர்.மிஸ்டர் மஜ்னு மற்றும் ரங் தே போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்


இவர் தற்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.1988ல் பிறந்த இயக்குநர் வெங்கி அட்லூரி 34 வயதிலேயே 4 படங்களை இயக்கிய நிலையில், தனது திருமணத்தை பிப்ரவரி 1ம் தேதி ஹைதராபாத்தில் பூஜா என்பவரை பிரம்மாண்டமான செய்து கொண்டார்.


இவரின் திருமண விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில், அவரது திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் இவரின்  ரங் தே படத்தில் நடித்திருந்தார் என்பதும் முக்கியமாகும்.


இதனால் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.தமிழில் உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாக உள்ள ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், வெங்கி அட்லூரி திருமணத்தில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான உடையை பார்த்து ரசிகர்கள் விதவிதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்வரும் பிப்ரவரி 17ம் தேதி தனுஷின் வாத்தி படம் வெளியாக உள்ள நிலையில், வரும் 4ம் தேதி இசை வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்நிலையில், இயக்குநர் வெங்கி அட்லூரி திருமணத்திற்கு நடிகர் தனுஷ் வரவில்லையா? அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement