• Jan 19 2025

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய உர்ஃபி ஜாவித்.. திடீரென என்னாச்சு? கதிகலங்க வைக்கும் போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான உர்ஃபி ஜாவித், ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியின் பாடி விதவிதமான வித்தியாசமான ட்ரெஸ்ஸிங் சென்சுகளை பின்பற்றி வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இவ்வாறு ஹிந்தி சீரியல் நடிகையாகவும் ஒரு மாடலாகவும் காணப்படுகின்றார் உர்ஃபி ஜாவித். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு சிறுவயதில் இருந்தே வித்தியாசமான உடைகளை அணிவது என்றால் பிடிக்கும். இவரது விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகளை வடிவமைக்க ஒரு குழுவே இவருக்கு பின்னாடி வேலை செய்கின்றதாம்.

உர்ஃபி ஜாவித் வித்தியாசமான உடைகளை எல்லாம் அணிந்து முடிந்து தற்போது வித்தியாசமான பொருட்களான உடைகளையும், உணவுகளான உடைகளையும் அணிந்து பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளார்.


இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் ஏற்பட்ட வீக்கத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களிடம் உருக்கமாக வேண்டியுள்ளார் உர்ஃபி ஜாவித்.

அதாவது, நான் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் விழிப்பேன். எனது முகம் எப்போதும் வீங்கி இருக்கும். நான் தினமும் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றேன். எனக்கு மோசமான ஒவ்வாமை உள்ளது. எனவே எனக்கு அறிவுரை கூற வேண்டாம் என்று பதவி விட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் சுகம் அடைய பிரார்த்திக்கின்றோம். இறைவனின் ஆசி உங்களுக்கு எப்போதும்  இருக்கும் என்று தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.


Advertisement

Advertisement