• Apr 28 2024

நிற்கதியான சமந்தா... சுயமாக எடுத்த முடிவுதான் இந்த நிலைமைக்கு காரணம்...தீயாய் பரவும் வீடியோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய  திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமந்தா நடிப்பில் தற்போது ஷாகுந்தலம் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அத்தோடு ஷாகுந்தலம் படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சகுந்தலாவாக சமந்தா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் மன்னர் துஷ்யந்தனாக நடித்துள்ளார்.அத்தோடு  இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

ஷாகுந்தலம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.அத்தோடு  ஷாகுந்தலம் படம் வெற்றி பெற வேண்டி சமீபத்தில் சமந்தா மற்றும் ஷாகுந்தலம் படக்குழுவினர் ஹைத்ராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

படம் ரிலீஸ் ஆக இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் தீவிர புரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தின் புதிய ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. காதல், ரொமான்ஸ், செண்டிமென்ட், சண்டைக்காட்சிகள் என ட்ரெயிலரே தெறிக்கவிட்டுள்ளது.

டிரெயிலரில் அழகு பதுமையாக உள்ளார் நடிகை சமந்தா. அத்தோடு சமந்தா மற்றும் தேவ் மோகன் பேசும் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.எனினும்  குறிப்பாக சமந்தாவிடம் பேசப்படும், நீ நிற்கதியாக நிற்பதை கண்டு கலங்குவதை விட கர்ம பலனை பங்கிட முடியாதென்ற வசனத்தையும் சுயமாக எடுத்த முடிவுதான் இன்று இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என்ற வசனத்தையும் கேட்ட ரசிகர்கள், இந்த வசனங்கள் அவருடைய நிஜ வாழ்க்கையுடன் பொருந்தி போவதாக தெரிவித்து வருகின்றனர்.

 சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.அத்தோடு  அதிக வியூஸ்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது சாகுந்தலம் டிரெயிலர். நடிகை சமந்தா தற்போது சிட்டாடல் மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி ஆகிய படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் மற்றும் குஷி படங்களை முடித்த பிறகு உடல் நிலையை கருத்தில் கொண்டு சில மாதங்கள் ஓய்வெடுக்க போவதாக கூறியுள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement