• May 19 2024

முக்கிய விழாவில் மாறி மாறி கிண்டலடித்த உதயநிதியும் அவரது மனைவியும் -விழுந்து விழுந்து சிரித்த சிம்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய அறிமுகமாகியவர் தான் கிருத்திகா உதயநிதி. இதனையடுத்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கி உள்ளார். தற்போது இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டலிலும் அறிமுகமாகியுள்ளார்.

இதில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி ஜி கிஷான், பூர்ணிமா பாக்கியராஜ், சின்னி ஜெயந்தி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூலை 29 அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் சாலை பயணத்தை தொடங்கும் ஆறு அந்நியர்கள் தங்கள் தனிப்பட்ட சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை பற்றிய கதை தான் பேப்பர் ராக்கெட். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிம்பு, உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மேடையில் பேசிய உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா இருவரும் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட நிகழ்வு அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

முதலில் பேசிய கிருத்திகா, நான் சினிமாவிற்கு வந்ததற்கு வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த சப்போர்ட் தான் காரணம். நான் சினிமாவிற்கு வருவது பற்றி உதயிடம் முதலில் சொன்ன போது சற்று யோசித்து விட்டு, பிறகு ஓகே சொன்னார். அவரே நினைத்திருப்பார், இது வீட்டில் இருந்தால் ஏதாவது தொல்லை செய்து கொண்டே இருக்கும். சினிமாவிற்கு போனால் வெளியில் போய் விடும் நாம நிம்மதியாக இருக்கலாம் என்று கூறினார். இதைக் கேட்டு உதயநிதியும், சிம்புவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பிறகு பேசிய உதயநிதி, எங்கள் டைரக்டர்…என்னுடைய டைரக்டரும் கூட. முதல் படம் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவை வைத்து முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி வணக்கம் சென்னை செய்தார். அதில் கூட எனக்கு கெஸ்ட் ரோல் தான். பிறகு விஜய் ஆன்டனியை வைத்து காளி படத்தை இயக்கினார். அதில் அவருக்கு மூன்று ஹீரோயின்கள். ஆனால் நான் எப்போ போய்,எனக்கு ஏதாவது கதை வச்சிருக்கியா என கேட்டாலும், உதய்…உங்களுக்காக ஒரு க்ரைம் ஸ்டோரி வைத்திருக்கிறேன் என சொல்வார்.

என்னது, க்ரைம் ஸ்டோரியா? வேணாம். நான் வேற டைரக்டரை பார்த்துக் கொள்கிறேன் என சொல்வேன். அப்படி சொல்லி விட்டு போய் தான் டைரக்டர் மாரி செல்வராஜிடம் மாட்டிக் கொண்டேன் என்னும் சுவாரஸியமாகக் கூறியதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement