• Oct 08 2024

காதல் தோல்வியால் திடீரென தற்கொலை செய்து கொண்ட டிவி சீரியல் நடிகை-அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகில் பல நடிகைகள் தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கொல்கத்தா நகரில் கடந்த மாதம் அடுத்தடுத்து 3 நடிகைகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மேற்கு வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே தனது குடியிருப்பில் கடந்த மாதம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட்12 நாட்களுக்குள் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜும்தார் தற்கொலை செய்தார்.

அதன் பின்னர் பிதிஷாவின் நெருங்கிய தோழி மஞ்சுஷா நியோகி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஒடிசா மாநிலத்தில் நயபள்ளி கட்சாஹியில் உள்ள வாடகை வீட்டில் ஒடிசா டிவி சீரியல் நடிகை ரஷ்மிரேகா ஓஜா என்பவர் வசித்து வந்தார். அவர் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டியுள்ளனர்.

அப்போதும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் ஜகத்சிங்பூர் போலீசார், ரஷ்மிரேகா ஓஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து, வீட்டை சோதனை செய்த போது, வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கி, ஒரு கத்தி, வெடிமருந்து மற்றும் ரஷ்மிரேகா கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த கடிதத்தில், தன்னுடை தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியுள்ளதாக கூறியுள்ளனர்.

இருப்பினும் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், நடிகை, ரஷ்மிரேகா, தனது ஆண் நண்பருடன் கடந்த ஒன்றரை மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

ரஷ்மிரேகா காதலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement