• May 04 2024

லியோ படத்தின் அன்பெனும் பாடலிருந்து EXCLUSIVE புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா- வாவ் வேற லெவல் கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர். 

ஏனெனில் இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது. இதனை அடுத்து படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.


படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான நா ரெடிதான் பாடலில் விஜய் வாயில் சிகரெட்டுடன் ஆடியதால் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. அதனையடுத்து Bad Ass என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது.அந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் இது வேண்டுமென்றே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் வரிகளுக்கு பதிலடி கொடுப்பது போல் வரிகள் அமைக்கப்பட்டிருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்தனர்.


இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அன்பெனும் மூன்றாவது பாடல் இன்றைய தினம் வெளியாகவுள்ளது. இதனால் இப்பாடலின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை த்ரிஷா தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement