• May 12 2024

"இரு பெண் புலிகள்"- பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டரை வெளியிட்ட த்ரிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகை த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தின் படப்ாிடிப்புக்கள் யாவும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.


அத்தோடு படத்தின் புரோமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் வேகமாக இறங்கியுள்ளனர்.விக்ரம் மற்றும் த்ரியா இருவரும் தன்னுடைய பெயரை குந்தவை என பதிவிட்டுள்ளார். மேலும் Profile புகைப்படங்களையும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் தங்கள் கதாபாத்திரத்தின் புகைப்படங்களை வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அதேபோல் தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.


இப்படத்திலிருந்து ஏற்கனவே போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில் தற்பொழுது மீண்டும் நந்தினி மற்றும் குந்தவை கதாபாத்திரத்தின் புதிய லுக்கை "இரு பெண் புலிகள்" என நடிகை த்ரிஷா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் சென்னை, கேரளா, கர்நாடகா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement