• Dec 01 2023

பொம்மை நாயகி திரைவிமர்சனம்

Aishu / 9 months ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித் தயாரிப்பில் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. அத்தோடு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருந்த பொம்மை நாயகி எந்த அளவிற்கு நம் மனதில் இடம்பிடித்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

கடலூர் மாவட்டத்தில் தனது மனைவி மற்றும் மகள் பொம்மை நாயகியுடன் வாழ்ந்து வருகிறார் யோகி பாபு {வேலு}. எனினும் அதே பகுதியில் யோகி பாபுவின் அண்ணன் அருள்தாஸ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

யோகி பாபு தனது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் என்பதினால் அவருடன் சற்று விலகியே இருந்து வருகிறார். அதற்கு மற்றொரு முக்கிய காரணம் யோகி பாபுவின் தாய் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் என்பதும் தான்.



கடலூரில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் யோகி பாபு, அவருடைய முதலாளிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் வேலையில்லாமல் இருக்கிறார். மேலும் இந்த சமயத்தில் ஊர் திருவிழா நடக்கிறது.

அத்தோடு இந்த நேரத்தில் யோகி பாபுவின் மகள் பொம்மை நாயகியிடம் இருவர் தவறான முறையில் நடந்துகொள்கிறார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடையும் யோகி பாபு உடனடியாக அவர்களை அடித்து துரத்தி விடுகிறார்.

இதன்பின் இந்த பிரச்சனைக்காக புகார் அளிக்க செல்கிறார் யோகி பாபு. காவல் துறை புகாரை வாங்க மறுக்கிறார்கள். இதனால் நீதிமன்றத்தில் புகாரளிக்கும் யோகி பாபு, அவர்களுக்கு தண்டனையும் வாங்கி தருகிறார்.

ஆனால், இதன்பின் மேல் முறையீடு செய்து வெளியே வந்து யோகி பாபுவை பழிவாங்க நினைக்கிறார்கள். எனினும் இதன்பின் யோகி பாபுவின் வாழ்க்கையில் என்ன நடந்தது? பிச்சனைகளை அவர் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.



எதார்த்தனமாக நடித்து நம் மனதில் இடம்பிடிக்கிறார் யோகி பாபு. மகளின் நிலையை கண்டு, வேதனையுடன் அலையும் யோகி பாபுவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது அவருக்கு நிகரான நடிப்பை காட்டியுள்ளார் சுபத்ரா.

பொம்மை நாயகியாக நடித்து நடிகை ஸ்ரீமதி, யோகி பாபு அண்ணனாக வரும் அருள்தாஸ் மற்றும் ஜி ம் குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். இயக்குநர் ஷான் எடுத்துக்கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியது.

அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் சாதி ஒருவனை எப்படி மாற்றிவிடுகிறது என்பதை நேர்த்தியாக காட்டியுள்ளார். ஆனாலும், முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் பெரிதாக இல்லை. எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தாலும் படத்தின் முடிவோ அந்த அளவிற்கு நம்மை கவரவில்லை.

ஒளிப்பதிவு எதார்த்தமாக அமைத்துள்ளது. பின்னணி இசை உணர்வுபூர்வமாக மனதை தொடுகிறது. எடிட்டிங் ஓகே.

பிளஸ் பாயிண்ட்

யோகி பாபு, பொம்மை நாயகியாக நடித்த ஸ்ரீமதி

அருள்தாஸ், சுபத்ரா, ஜி.எம் குமார்

கதைக்களம்

மைனஸ் பாயிண்ட்

முதல் பாதியை போல் இரண்டாம் பாதி மனதை கவரவில்லை

Advertisement

Advertisement

Advertisement