• Apr 27 2024

டாப் 10 - முதல் இடம் பிடித்த சீரியல் எது தெரியுமா? சன் தாெலைக்காட்சி சீரியல்களுக்கு எகிறும் டி ஆர் பி

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

சன், விஜய், ஜீ தமிழ் இந்திய தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 40வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விபரங்கள் வெளியாகியிருக்கிறது.


திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர்களை விட தொலைக்காட்சி சீரியல்களுக்கே அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டி ஆர் பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது இந் நிலையில் நாடகத்தொடர்கள் பிடித்த இடம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 


அந்தவகையில் சன்  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11.54 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. கயல் சீரியல் இரண்டாவது இடத்தையும் , தாெடர்ந்து சுந்தரி, வானத்தைப்போல , இனியா ஐந்தாவது இடத்தினையும் பெற்று சன் தொலைக்காட்சி தொடர்களே முதன்மை வகிக்கின்றது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரத்தில் 8. 84 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. அதேபோல பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டுமே இந்த முறை 8.21 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்திலும், ஆஹா கல்யாணம் சீரியல் இந்த வாரத்தில் 6.82 புள்ளிகளை பெற்று 9-வது இடத்திலும் இருக்கிறது.


மேலும் சன் தாெலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரத்தில் 7.15 புள்ளிகளைப் பற்றி எட்டாவது இடத்திலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தில் 6.64 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement