• May 07 2024

ராஜ்கிரண் சேர் படத்தில் இதை கஷ்டப்பட்டு பண்ண வைச்சாங்க, அதனாலேயே வெயிட் போட்டுட்டேன்- ஓபனாகப் பேசிய சங்கீதா

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் நடிகை சங்கீதா.இந்த படத்தில், விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின் துறுதுறுப்பான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஆனால், அதற்கு முன்பே சங்கீதா பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டங்களில் வெகுவேகமாக வளர்ந்து வந்த நடிகைகளில் அவரும் ஒருவராக திகழ்ந்தார்.இதனையடுத்து, சங்கீதா திடீரென ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை ஒளிப்பதிவாளர் சரவணன்தான்.


இவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சிம்பு ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றே கூறுகின்றனர். மேலும் சங்கீதா குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எல்லாமே என் ராசா படத்தில் கரடு முரடான தோற்றத்தில் இருப்பவருக்கு ஜோடியாக நடித்தேன்.

ராஜ்கிரண் சார் தான் எனக்கு ஜோடி, அந்த படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்றார்கள்.


அதனால் தினமும் ராஜ்கிரண் சார் அவர்களின் ஆலீஸில் இருந்து வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமாக வரும். ஐஸ்கிரீம் வேண்டுமென்றால் நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் சாப்பாட்டை கொஞ்சமாதான சாப்பிட முடியும்.ஆனால் அவர்கள் கண்டிப்பா அதிகமா சாப்பிடணும்னு கட்டாயப்படுத்தினாங்க. இதனால் சாப்பிட நான் மிகவும் கஷ்டப்பட்டு அழுதுகொண்டே சாப்பிட்டேன் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement