• Mar 13 2026

'நான் இறக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.' கடற்கரையில் நின்று திடீரென பதிவிட்ட ரட்சிதா! ரசிகர்களுக்கு பெரும் பதற்றம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரட்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


அதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்து, சிறப்பாக விளையாடி வருகிறார் தினேஷ்.


இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தினேஷ் இருக்க,  நடிகை ரட்சிதா  போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான பாடல் ஒன்றுடன் தனது வீடியோவை பதிவிட்டுள்ளார்.


அதன்படி, அண்மைக் காலமாகவே நடிகை ரட்சிதா சோகமான பாடல், பதிவு என தொடர்ந்து போட்டு வருகிறார்.


இதனை பார்த்த ரசிகர்கள், இவங்களுக்கு என்ன தான் ஆச்சு.. போக போக ரொம்ப சோகமாவே போறாங்க.. பழையபடி மாற மாட்டிங்களா..என கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ரட்சிதா கடற்கரையில் நின்று இவ்வாறு பதிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement