• Apr 26 2024

குக்வித்கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- வெளியாகிய சூப்பர் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை ஜெயித்தனர். மூன்று சீசன்களின் ஹாட்ரிக் வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனைக் காட்டிலும் சற்று பிரம்மாண்டமாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குக் வித் கோமாளி வெற்றிபெற முக்கிய காரணமே கோமாளிகள் தான். அந்த வகையில் இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேஷி, சுனிதா,  ஆகியோர் மட்டுமே பழைய கோமாளிகள் மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். 

அதில் முதல் வார நிகழ்ச்சியில் ஜிபி முத்து மட்டும் தான் சற்று கவனம் ஈர்த்தார். மற்றபடி எஞ்சியுள்ள புதிய கோமாளிகள் பெரியளவில் சோபிக்கவில்லை.அதேபோல் குக்குகளை பொறுத்தவரை விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்ட்ரியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய ஷிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் புதுவரவாக நடிகர் மைம் கோபி என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் கோமாளிகளாக தங்கதுரை மற்றும் மணிமேகலை ஆகியோரும் வந்துள்ளனர். இந்த வாரத்திலிருந்து போட்டிகளும் ஆரம்பிக்கின்றன. இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement