• May 05 2024

இதற்குத் தானே ஆசைப்பட்டீங்க பிக்பாஸ்... குடும்பத்தோடு சேர்த்து மணியையும் அனுப்பிடுங்க.. விளாசும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6 சீசனானது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தாரை பார்த்து பல நாட்களாகிவிட்டது. அதனால் குடும்பத்தாரை அழைத்து வந்து போட்டியாளர்களை சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ். 

அதேபோல் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் ரச்சிதா மகாலட்சுமியின் அம்மாவை பார்க்க முடிந்தது. அதேபோல் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மணிகண்டனின் குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். அதில் அம்மா, மனைவி, மகன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வந்திருக்கிறார்கள். 


இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பிக்பாஸை தாறுமாறாக விளாசி வருகின்றனர். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷை அழைத்து வந்து டி.ஆர்.பி.யை ஏற்ற வேண்டும் என்று தானே சூப்பராக விளையாடி வந்த தனலட்சுமியை அவசர அவசரமாக பேக் செய்து அனுப்பி வைத்தீர்கள். ஆனால் மணிகண்டன் குடும்பத்தால் மட்டும் டி.ஆர்.பி. எகிறிவிடாது அதனை மனதில் வைத்திருங்கள்.

இதற்காக தானே தனலட்சுமியை வெளியேற்றி விட்டு மணியை இத்தனை நாட்களாக தங்க வைத்தீர்கள். அதான் வேலை முடிந்துவிட்டது அல்லவா?. குடும்பத்தாருடன் சேர்த்து மணியையும் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். இந்த ஒரு ப்ரோமோவுக்காக மணிகண்டனை எத்தனை முறை கேப்டன் ஆக்கினார்கள். எத்தனை பேரை பலிக்கடா ஆக்கினீர்கள். இப்போ சந்தோஷமா பிக்பாஸ் என கேள்வி எழுப்பியுள்ளனர்.


இருப்பினும் தன் குடும்பத்தார் வர வேண்டும் என்று தனலட்சுமி ரொம்பவே ஆசைப்பட்டார். டாஸ்குகளையும் சிறப்பாக செய்தார். கன்டன்ட் கொடுத்து நிகழ்ச்சியை மென்மேலும் சுவாரஸ்யமாக்கினார். அசீமுக்கு டஃப் கொடுத்தார். திமிர் இருந்தாலும் சிறப்பாக விளையாடி அசத்தினார். அவரை இந்த வாரம் வரைக்காவது தங்க வைத்திருக்கலாம் பிக்பாஸ் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது இந்த பிக்பாஸ் வீட்டில் இன்னும் என்ன கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்குமோ என பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement