• May 17 2024

67 வயதிலும் பிட்டாக இருக்கும் சரத்குமாரின் ரகசியம் இது தானாம்-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் டிப்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் பிரபு, கார்த்திக், விஜயகாந்த் போன்றவர்களின் படங்களில் துணை நடிகராக நடித்தே கதாநாயகனாக அறிமுகமாகினார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய சூரியன் திரைப்படம் மெகா ஹிட்டாக அமைந்தது.

மேலும் சூப்பர் ஹீரோ என்று அழைக்கப்படும் இவர் நடிப்பில் வெளியாகிய கட்டபொம்மன், அரண்மனை காவலன், நம்ம அண்ணாச்சி, போன்ற பல படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனது. அதன் பிறகு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது தான் நாட்டாமை. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இவ்வாறு பல படங்களில் நடிக்கும் இவருக்கு தற்போது 67 வயது.இவர் நடிகர் என்பதை தாண்டி அவர் பிட்னஸிற்கு பெயர் போனவர்.

தனது இளம் வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றவர். இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருக்க என்ன செய்கிறேன் என்ற விஷத்தை அவரே தெரிவித்திருக்கிறார்.

மேலும் காலை எழுந்தவுடனே 10 பாதாம் அதனுடன் ப்ளாக் காஃபி அல்லது காஃபி சாப்பிட்டுவிட்டு , உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுவிடுகிறார். உடற்பயிற்சி முடித்தவுடன் மீண்டும் 10 பாதாம் சாப்பிடுவார்.

சிறிது நேரம் கழித்து பெர்ரி பழங்களை பால் சேர்க்கப்பட்ட ஸ்மூத்தி அதனுடன் ஒரு இட்லி சாப்பிடுவார். அத்தோடு காலை 11 மணியளவில் பீனட் பட்டர் சேர்த்து ஒரு சப்பாத்தியை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்கிறார்.

அதன் பிறகு மாலை 4 மணிக்கு 10 முந்திரியுடன் , 3 பாதம் சாப்பிட்டு விட்டு , இரவு உணவாக சியா விதைகளுடன் பாதாம் பால் சேர்த்து சாப்பிடுகிறாராம்.இதுதான் அவரது தினசரி டயட்டாக உள்ளது என கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement