• May 12 2024

நடிகர் விஜய்யை அப்படி கூப்பிட்டதற்கு இது தான் காரணம்-கமல்ஹாசன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் கடந்த 3 ஆம் திகதி வெளியாகி நல்ல வசூல் வேட்டையை கிளப்பி வருகின்றது.

இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியதற்கு கமல் சொகுசு கார் ஒன்றையும் அவருக்கு பரிசளித்து இருந்தார்.மேலும் நடிகர் சூர்யா இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். எனவே அவருக்கும் கமல்ஹாசன் அன்பு பரிசை வழங்கினார்.

அத்தோடு இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே தமிழ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி தமிழ் திரையுலகிற்கே நிம்மதி பெருமூச்சை உண்டாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கமல்ஹாசன் தளபதி விஜய்யை ஐயா என்று அழைத்தார். மேலும் விஜய் ஐயா கால்ஷீட் கொடுத்தால் உடனே படவேலைகளை ஆரம்பிக்கலாம் என்றார் கமல்.

எனினும் இதைத்தொடர்ந்து தற்போது நிருபர் ஒருவர் விஜய்யை ஏன் ஐயா என்று அழைத்தீர்கள் என்று கமலிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கமல், ஒரு மரியாதை நிமித்தமாகத்தான் நான் விஜய்யை ஐயா என்று அழைத்தேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட என்னை கமல் ஐயா என்றுதான் அழைப்பார் என்றார் கமல். இந்நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement