90 களில் -பல பெண்களின் கனவு நாயகனாக இருந்த நடிகர் பிரித்விராஜ் இவர் மோகன்லால் நடிப்பில் வருகின்ற 27 ஆம் திகதி வெளியாகவுள்ள "எம்புரான்" படத்தை இயக்கி நடித்துள்ளார். இப் படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் "யாராவது என்கிட்ட தமிழ் படம் பண்ணுங்க என்று கதை சொன்னால் நான் அவங்க கிட்ட, நான் 2014 ல் கடைசியா 'காவியத் தலைவன் என்னும் தமிழ் படம் நடிச்சேன். அதற்கு எனக்கு தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு கிடைச்சது. இப்போ நான் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இதுக்கு மேல ஒரு தமிழ் படம் பண்ணால், அது அந்த படத்தை விட பெட்டரா பண்ணனும். இல்லனா நான் இப்படியே இருந்துக்கிறேன் என்று சொல்வேன். ஏன்னா, தமிழ் சினிமா எனக்கு ஒரு சாப்ட் கார்னர் மாதிரி. என்னுடைய கேரியரில் கஷ்டமான காலகட்டத்தில் தமிழ் சினிமா தான் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. தமிழ் சினிமா மீது நான் அந்த அளவுக்கு காதல் மற்றும் அன்பு வைத்திருக்கிறேன்." என கூறியுள்ளார்.
Listen News!