• Feb 04 2025

ஐஸ்வர்யாவின் மகள் மீது தவறான குற்றச்சாட்டு - கோபத்தில் நடிகை!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய நடிகைகளில் ஒருவராகவும் உலக அழகியாகவும் விளங்குபவரே ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி , தமிழ் , பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து தனக்கென பல ரசிகர்களை கொண்டுள்ளார். ஐஸ்வர்யா மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமானதுடன் பின்னர் ஜீன்ஸ் , குரு மற்றும் ஜோதா அக்பர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


ஐஸ்வர்யா 2007 ம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையே ஆராத்யா பச்சன். சமீபத்தில் ஊடகங்களில் ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா பச்சன் பற்றி தவறாக வெளியாகி வருகின்றது.

இதனால் கோபம் அடைந்த ஐஸ்வர்யா தனது மகள் பற்றி தவறாக கதைத்தவர்கள் மீது மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இதற்கு டெல்லி நீதிமன்றம்  கூகுள் மற்றும் பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்களை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement