• May 01 2024

அடடே 'மாமன்னன்' படத்தில் ஹைலைட்டான விஷயமே இதுதானாம்... பட்டாசு வெடிக்கும் ரசிகர்கள்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'மாமன்னன்'. இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார். 

அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வடிவேலுவும் மாமன்னன் படத்தில் ஒரு ஹீரோதானாம். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக இப்படத்தின் மூலமாக அழுத்தமான ரோலில் நடிப்பதனால் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.


அந்தவகையில் 'தேவர் மகன்' படத்தில் இடம்பெற்ற இசக்கி என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு தான் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இதுவரை படம் பார்த்த ரசிகர்கள் பொதுவாக பாசிட்டிவான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் மாமன்னன் படத்தில் ஏதோ ஒரு விஷயம் குறைவதாகவும் கூறி வருகின்றனர். அந்தவகையில் மாரி செல்வராஜின் படங்களில் இருக்கும் அனைத்து விஷயங்களும் மாமன்னன் படத்திலும் இடம்பெற்றுள்ளதாம்.


அதிலும் குறிப்பாக இப்படத்தில் எமோஷனல் காட்சி குறைவாக இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சனம் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் மாமன்னன் படத்தில் பல சிறப்பான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

எனவே மாமன்னன் படத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் போட்டிபோட்டு நடித்துள்ளதாகவும், குறிப்பாக வடிவேலுவின் நடிப்பு ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறப்படுகின்றது. 

அதுமட்டுமல்லாது ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்தின் காட்சிகளை அடுத்த லெவலுக்கு கொண்டுபோவதாக அமைந்துள்ளதாம். மேலும் படத்தின் இன்டெர்வல் பிளாக் வேற லெவெலில் இருப்பதாகவும், இதுவே இப்படத்திற்கு ஹைலட்டாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement