• May 03 2024

நகுலின் மகளா இது... அப்போ நம்ம தேவயானிக்கு மருமகள் ஆச்சே... அட இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை தேவையானியின் தம்பியான நகுல் 2003-ஆம் ஆண்டில் வெளியான இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.  பின்னர் 2008-ம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால் சினிமாவில் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.



அதையடுத்து ஒரு சில பட வாய்ப்பு அவரைத் தேடி அப்படங்களிலும் தன்னுடைய நடிபினை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாது தற்போது ‘வாஸ்கோடகாமா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.  ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர் நடிகராக மட்டுமன்றி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகின்றார்.



நகுல் கடந்த 2016-ம் ஆண்டு, தனது காதலி ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு அகிரா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அதைமட்டுமன்றி சமீபத்தில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இவர்களின் குடும்ப புகைப்படங்களானவை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.



அப்புகைப்படங்களை நகுலின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அதில் இவரது மகள் அழகாகவும், வளர்ந்தும் இருக்கின்றார்.




இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு "உங்கள் மகள் இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரா" எனக் கேட்டு தமது கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement