• May 06 2024

விக்ரம் படத்தில் பகத் பாசிலின் கதாப்பாத்திரம் இது தானாம்- போஸ்டரோடு வெளியாகிய அறிவிப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென்று ஒர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. இப்படம் 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இந்த படத்தில் யார் யார் என்னென்ன வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரோடு அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement