விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 9, தற்போது 76 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

தற்பொழுது பிக்பாஸ் இல்லத்தில் மொத்தம் 12 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் சிலர் எவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டாலும், கசப்பான சண்டைகளால் அவர்களது ஆட்டம் சிதறிப் போனது.
அதன்பிறகு நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அமித் , பிரஜின், சாண்ட்ரா மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் என்ட்ரி கொடுத்திருந்தனர். ஆரம்பத்தில் இவர்களின் ஆட்டம் சூடு பிடித்தது; ஆனால் நாளடைவில் அவர்கள் பெரும்பாலும் மற்ற போட்டியாளர்களைப் போல மாறிவிட்டனர்.

இதற்கிடையில் நிகழ்ச்சியை மீண்டும் சூடாக்க வெளியேறிய போட்டியாளர் ஆதிரையை House-க்கு திரும்ப கொண்டு வந்தனர். இதனால் நிகழ்ச்சி மீண்டும் சண்டை, சச்சரவு மற்றும் அதிரடியான நிகழ்வுகள் ஏற்படத் தொடங்கியது.
இந்நிலையில் சமீபத்திய ப்ரோமோவில், நடுவர் விஜய் சேதுபதி சாண்ட்ராவிடம், "நீங்கள் வாரம் முழுக்க அழுதுகிட்டே இருந்தால்… எப்படி வேடிக்கை பார்ப்பது? எத்தனை மணிக்கு சமைக்கணும், எப்ப சாப்பிடணும் என்று ரூல்ஸ் நீங்கள் ஏன் போடுறீர்கள்.." என்று கேட்டிருந்தார்.

இதற்கு சாண்ட்ரா, "நான் பிரச்சனை ஆக்கணும் என்று செய்யவில்லை..." என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜய் சேதுபதி இது உங்க வீடு இல்ல... என்று கோபமாக பதிலளித்துள்ளார்.
Listen News!