• Mar 26 2025

"எனது திருமண வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது...!" நடிகை பாவனா பதில்...

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தொடர்ந்து புகழ் பெற்ற நடிகை பாவனா தமிழ் சினிமாவில் சித்திரம்பேசுதடி, அசல், ஆர்யா, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு அவரது அண்ணா இயக்கும் "The Door" எனும் திரைப்படத்துடன் திரை உலகிற்கு மீண்டும் கம்பேக் செய்யவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் teaser வெளியிடப்பட்டு ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பின்னர் நடிகை பாவனா பல்வேறு ஊடகங்களுக்கு நேர்காணல்கள் வழங்கி படத்தைப்பற்றி கூறும் வகையில் பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில் தற்போது " நானும் எனது கணவரும் பிரிந்துவிட்டதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. சிலர் வேண்டுமென்றே இத்தகைய தவறான தகவல்களை பரப்புகின்றனர். எனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்வதை நான் விரும்பவில்லை. அதனால் எனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்கிறேன். எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது."  என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement