• May 07 2024

நான் இப்படித் தான் படம் எடுக்கின்றேன்- அதில் பா.ரஞ்சித்தும் இருக்கின்றார்- பகாசுரன் இயக்குநர் மோகன் ஜி கருத்து!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் பகாசுரன். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குநர் மோகன் ஜி “நான் எந்த ஐடியாலஜியையும் எதிர்த்து படம் எடுக்கவில்லை.  நான் பார்த்த விஷயங்களை ஆய்வு செய்து படமாக எடுக்கிறேன். 


நான் முன்பு இயக்குநர் பா ரஞ்சித்துக்கு பேஸ்புக்கில் நண்பராகதான் இருந்தேன். இப்போதும் அவர் படங்கள் நன்றாக இருந்தால் பாராட்டி ட்வீட் செய்கிறேன்.  சினிமாவில் எனக்கு எதிரியும் கிடையாது. நண்பர்களும் கிடையாது” எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement