• Mar 25 2023

“எனக்கு இதுவே போதும் நான் ரெஸ்ட் எடுத்து கொள்கின்றேன்..” கோபியின் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில் தற்போது விறுவிறுப்பின் உச்சத்தில் செல்கின்றது பாக்கியலட்சுமி தொடர்.

இந்த தொடரில் தற்போது பாக்யா பல தடைகளை தாண்டி எப்படி கேட்டரிங் பிஸ்னஸில் ஜெயிக்க ஆரம்பிக்கிறார் என காட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாக்யாவை ஏளனப்படுத்தி விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்த கோபி படாத பாடு பட்டு வருவது போல காட்டப்பட்டு வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் ஆங்கிலம் பேச தெரியாது என பாக்யாவை ராதிகா அசிங்கப்படுத்தியதால் அவருக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்து பாக்யா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாசுக்கு செல்கிறார். அங்கு செல்லும் வழியில் அவர் ரஞ்சித் பைக் மீது மோதிவிடுகிறார்.

அவர்கள் இருவரும் ஒரே ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாசு தான் சென்றிருக்கின்றனர். அதனால் இனி அவர்கள் இருவரது ட்ராக் தான் பாக்யலட்சுமியில் வர போகிறது என கூறப்படுகின்றது.

இனி ரஞ்சித் ரோலுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும், கோபி கதாபாத்திரத்திற்கு காட்சிகள் குறைக்கப்படும் என சொல்லப்படுகின்றது. இதை கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் உறுதி செய்து உள்ளார்.

'3 வருடங்களாக, 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன், எனக்கு இதுவே போதும். இனி ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறேன்' என கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.





Advertisement

Advertisement

Advertisement