• Apr 01 2023

சோகத்தில் மிதக்கும் விக்னேஷ் சிவன்...நயன் எடுத்த திடீர் முடிவு...நடந்தது என்ன..?

Aishu / 4 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.இந்த விசயம் மிகப்பெரியளவில் பேசுபொருளாகியது. திருமணமானது முதல் தற்போது வரை நயன்தாரா அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறாராம். 

அதாவது, இரட்டை குழந்தை பெற்றது, கோவிலுக்கு காலணியோடு சென்றது, திருமணத்தில் தோஷம், மாங்கல்ய தோஷம், விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டது, நயன் தாராவின் தொடர் தோல்வி படங்கள் என்று அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நயன்.



அதுமட்டுமில்லாமல் இரு படங்களுக்கு 20 கோடி சம்பளமாக பேசப்பட்ட நிலையில் அதுவும் கைநழுவி போனது என்று அடிமேல் அடிவாங்கி வருகிறார் எனவும் கூறப்படுகின்றது. இதன் விரக்தியில் நயன் தாரா ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

இனிமேல் நடிக்க போவதில்லை என்றும் படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டப்போவதாகவும் முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. குழந்தைகளை பார்த்துக்கொள்ள சினிமாவில் இருந்து ஓய்வு பெறவும் முடிவெடுத்திருக்கிறாராம்.



இவ்வாறுஇருக்கையில், பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருவது விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததால் தான். அதனால் நயன் தாரா, விக்னேஷ் சிவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளாராம். ஆனால் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்த இரு மாதத்திலேயே விவாகரத்து வதந்தி செய்திகள் ஆரம்பித்துவிட்டன.

அத்தோடு இது வெறும் வதந்திகளாகவே நயன்தாரா விசயம் மாறி வருவது சகஜமாகிவிட்டது என்று சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்துக்களை  தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் மனைவி சிபாரிசு செய்த அஜித் படம் கைநழுவி போனதே என்று நினைத்து விக்னேஷ் சிவன் சமுகவலைத்தளத்தில் சோகமான மற்றும் மோடிவேஷன் செய்திகளை பதிவிட்டும் வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement