• May 05 2024

நடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியம் இது தானாம்- அடக் கடவுளே இதெல்லாம் பண்ணமாட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை தான் த்ரிஷா.இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அத்தோடு இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றார்.

இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தைப் போலவே தற்பொழுதும்  ஃபிட்டாகவே இருக்கின்றார்.இதற்காக அவர் என்ன தான் செய்கிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். அந்த வகையில் த்ரிஷாவின் இந்த பிட்னஸ் டயட் ரகசியங்கள் பற்றி தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.


1. காலையில் வெறும் ஊட்ட சத்து மிக்க பழங்கள் மட்டுமே, பொரித்த, வறுத்த உணவுகளுக்கு இடம் கிடையாதாம்.

2. வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம்.

3. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவார். அதில் ரொட்டி வகைகள், ஆம்லெட், தயிர் உள்ளிட்டவை இவருக்கு பிடித்தமானவையாகும்.

4. தினசரி யோக, உடற்பயிற்சி, தியானம் மேற்கொள்வாராம்.


5. ஃபிரெஸ் ஜூஸ் மட்டுமே குடிப்பாராம். அதேபோல வைட்டமின் சி சத்துள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழரச பானங்கள் விரும்பி குடிப்பவராம்.

6.  சர்க்கரை உணவுகள் மற்றும் மைதா உணவுகளுக்கு இடமே கிடையாதாம்.

7. உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதிக தண்ணீர் குடிப்பாராம்.


8. அவர் கையில் எப்போதும் பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்று இருக்குமாம்.

இருப்பினும், அவர் பிரியாணி விரும்பி சாப்பிடுவாராம். ஒரு வேளை உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட, அதை குறைத்து விட்டுத் தான், மறு வேலை பார்ப்பார்.  தேவைபட்டால் ஒரு நாள் முழுவதும் பட்டினி கூட இருப்பாராம்.இவ்வாறு தான் தனது உடலை பளபளப்பாக வைத்திருக்கின்றாராம் என்று கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement

Advertisement