• May 04 2024

என்னடா இது பெரிய உருட்டு கதையா இருக்கு... லியோ படத்தில ராம் சரணா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடிக்கிறார் .இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்த கூடுதல் தகவல் ரசிகர்களுக்கு குழப்பமும் ஹப்பியும் சேர்ந்து இருக்கிறது. அதாவது, இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இதை சுற்றி பரவி வரும் வதந்திகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

அந்த வகையில், தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது எதிர்பாராத ஒன்றாகத்தான் இருக்கிறது. எனவே, லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக இருப்பதாகவும், சமீபத்திய இந்த சலசலப்பு எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

அதாவது, விக்ரம் படத்தில் ரோலக்ஸ் எப்படி வந்தாரோ அதுபோல், லியோ திரைப்படத்தில் ராம் சரண் வருவார் என்றும், டைட்டில் அறிவிப்பு வீடியோவில், இறுதியில் கருப்பு நிற காரில் ரோலக்ஸ் வருகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், அந்த காரில் உள்ள நம்பர் பிளேட் தெலுங்கனாவில் இருப்பது என்று கூறப்படுகிறது.

இதனை வைத்து, படத்தில் சரண் இருப்பதாக நம்பப்படுகிறது. லியோ படத்தை பற்றிய இந்த கோட்பாடுகள் ட்விட்டரில் வைரலாக்கி, படத்திற்கு பிரமாதமான ஹைப்பைக் கொண்டு வருகின்றன. ஆனால், ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

 படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா தவிர, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், அர்ஜுன் சர்ஜா ஆகிய நட்சத்திர பட்டாளமே  நடித்துள்ளனர். 

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .








Advertisement

Advertisement

Advertisement