• Feb 03 2026

இந்த தீ ஆபத்தானது இல்ல...கடவுள் முன் வைக்கின்ற அகல்விளக்கு.! "பராசக்தி" குறித்து ரவிமோகன்

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமூக கருத்துகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் ரவி மோகன் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


விழாவில் உரையாற்றிய ரவி மோகன், “இந்தப் படம் சுயமரியாதையைக் காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன்.

இந்த தீயை [பராசக்தி] நிறைய பேர் அணைக்க வெளியில முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீ இல்லை. கடவுள் முன் ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு.” என்று கூறினார். அவரது இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரவி மோகனின் இந்த வார்த்தைகள் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலர் இந்த பேச்சை சமூக சிந்தனையுடனான தைரியமான கருத்து என பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement