• May 07 2024

சிம்பு தான் இதற்கு செட் ஆவார் என்று சொன்னாங்க அது போலவே நடந்திருச்சு- நெகிழ்ந்த டி ராஜேந்தர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகின்றேன் வெந்து தணிந்தது காடு வெற்றி பெற வேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன் என  டி.ராஜேந்தர் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு.பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது மனதில் பட்டதை பேசும் தைரியமானவராக வலம் வருகின்றார். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.


மேலும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு 100க்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது. இது இவருடைய திரைவாழ்க்கையில் வெற்றிப் படமாக அமைந்தது என்பதும் முக்கியமாகும்.

இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இப்படம் நாளை உலகமெங்கும் திரையில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படம் குறித்து  சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, என் மகன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல் பார்த்தேன்.


அதில் சிம்புவின் உழைப்பை பற்றி அவர் பேசியிருந்தார். அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. இப்படத்தில் ஒரு 20 வயது இளைஞனாக சிம்பு நடிப்பாரா என்ற சந்தேகம் அவருக்கு முதலில் இருந்தது. ஆனால் இயக்குநர் கௌதம் மேனன் சிம்பு நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறினார்.

எனவே இதற்காக சிம்பு தன் உடலை வருத்தி எடையை குறைத்து இக்கதாபாத்திரத்திற்காக போட்டோஷூட் எடுத்து அப்புகைப்படத்தை ஜெயமோகனிடம் காண்பித்தார். அதை பார்த்த ஜெயமோகன் சிம்பு 18 வயது தக்க இளைஞனாக மாறிவிட்டார் என கூறி பாராட்டினார்.

ஜெயமோகன் போன்ற ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் சிம்புவை பாராட்டியதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. மேலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற இறைவனை வேண்டி கொள்வது மட்டுமல்லாமல், ஊடக துறையான உங்களின் ஆதரவும் வேண்டும் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement