• May 08 2024

இந்த ஆண்டில் விவாகரத்து செய்து கொண்ட தமிழ்ப் பிரபலங்கள்... அடடே இவங்களுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்ற விடயம் என்றால் அது திரையுலக பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகளே.

சினிமாவைப் பொறுத்தவரையில் முதல் திருமணம் செய்து விட்டு சிறிது காலத்தின் பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது என்பது சகஜமான ஒரு விடயம் தான்.

இருப்பினும் ஒரு சில பிரபலங்களை பொறுத்தவரையில் பல வருடங்களாக  ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து விட்டு பின்னர் சிறிய கருத்து வேறுபாட்டின் காரணமாக திடீர் என்று பிரிந்து கொண்டவர்களும் உண்டு.

அதிலும் குறிப்பாக 2022-ஆம் ஆண்டு தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் விவாகரத்து செய்து கொண்டார்கள். அவர்கள் யார் யார் எனப் பார்ப்போம்.


அதில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது பல வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறி விவாகரத்தை அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிரிந்தும்  கொண்டனர். இந்த விடயமானது ரசிகர்களுக்கு பெரியளவில் அதிர்ச்சியை கொடுத்தது.

இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாலாவும் தனது திருமண வாழ்க்கையை  முடித்து கொண்டிருக்கின்றார். அதாவது பாலாவும் அவரது மனைவி முத்துமலரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

அடுத்ததாக இசையமைப்பாளர் டி. இமான். இவர் தனது மனைவி மோனிகாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் திகதி விவாகரத்து செய்துகொண்டார்.

விவாகரத்துக்கு பின்னர் டி. இமான் மீது பல குற்றசாட்டை அவருடைய மனைவி எடுத்து வைத்தார். இருப்பினும் விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே டி. இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக பல பிரபலங்களும் இந்த ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement