• May 06 2024

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் நான்கு பைனலிஸ்ட் இவர்கள் தானாம்.. வெளியேறிய பிரபலம் யார் தெரியுமா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் செமி பைனல் சுற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த டிக்கெட் டு பினாலே சுற்றில் விசித்திரா நேரடியாக பைனலிஸ்ட் ஆனார்.

அதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற செமி பைனல் சுற்றில் கிரண், மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்த நால்வரில் இருந்து மூன்று நபர்களை பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்க போவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி, இரண்டாவது பைனலிஸ்ட்டாக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை தொடர்ந்து சிவாங்கி மூன்றாவது மற்றும் ஸ்ருஷ்டி நான்காவது பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கிரண் மட்டும் தேர்ந்தெடுக்காததால் வெளியேறினார்.

இதனால் அடுத்த வாரம் நடக்கவுள்ள வைல்ட் கார்டு சுற்றில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களுடன் இணைந்து கிரண் போட்டியிடுவார்.

குக் வித் கோமாளி சீசன் 4ல் பைனலிஸ்ட் ஆன நால்வருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 





Advertisement

Advertisement

Advertisement