• May 04 2024

லியோ படத்தில் அரசியல் பற்றி எதுவும் இல்லை, முட்டுக்கட்டை போடாதீங்க- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ அட்வான்ஸ் புக்கிங் 15ம் தேதி முதல் தொடங்கும் என சொல்லப்படுகின்றது.

லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.மேலும் லியோ இசைவெளியீட்டு விழா நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அண்மையில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இந்த நிலையில் லியோ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஜி.ஓ-வில் விஜய் பெயருக்கு முன்னால் 'தளபதி' என குறிப்பிடப்பட்டிருந்ததும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், லியோ பட விவகாரம் பற்றி அமைச்சர் சாமிநாதன் விளக்கம் கொடுத்துள்ளார். 

சென்னிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன், "விஜய்யின் லியோ பட விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை. லியோ திரைப்படத்துக்கு முட்டுக்கட்டை போடுவதால் அரசுக்கு என்ன கிடைக்கப் போகிறது.? சிறப்புக் காட்சி திரையிட தயாரிப்பு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்ததால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். இதனால் விஜய்க்கு அரசியல் அழுத்தம் தரப்படுவதாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement