• May 19 2024

உங்களுக்காக இன்னும் நிறைய பெரிய விஷயங்கள் வர இருக்கிறது- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கதிரவன் போட்ட முதல் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!



பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டி உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், மைனா, ஷிவின், கதிரவன், அமுதவாணன் ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் யார் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு கடைசி சில வாரங்களுக்கு முன் பணப்பெட்டி ஒன்று வீட்டுக்குள் அனுப்பப்படும் என்பது யாவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் நேற்றைய தினம் அனுப்பப்பட்ட பணமூட்டையில் இருந்த மூன்று லட்சத்துடன் கதிரவன் இந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.


இது அனைவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக அதிக தொகை வந்தால் எடுக்கலாம் என ஆவலோடு காத்திருந்த மைனா மற்றும் அமுதவாணனுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.கதிரவன் பணப்பெட்டியை எடுக்க தகுதியான நபர் என்றாலும், அவர் இன்னும் கொஞ்சம் தொகை கூடிய பின் எடுத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய கதிரவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் எனக்கு இத்தனை காலமும் சர்ப்போட் பண்ணிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நான் தெரியாமல் ஏதாவது தப்பு பண்ணியிருந்தால் மன்னிச்சிடுங்க.நான் எப்போதும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்வேன். இன்னும் நிறைய விடயம் உங்களுக்கு சொல்ல இருக்கு அதெல்லாம் விரைவில் சொல்வேன் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement