• Apr 28 2024

வாரிசு படத்துக்கு தியேட்டர் சிக்கலா? அஜித் பட விநியோகஸ்தர் உதயநிதி சொன்ன தகவல் இது தான்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் விஜய் திரைப்படங்கள் திரையில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது புதிதல்ல என்பதால் வாரிசு துணிவு திரைப்படங்கள், பொங்கல் தினத்தில் வெளியாவது பிரச்சினையாக இருக்காது என்று துணிவு திரைப்படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி கூறியுள்ளார்.

'மீகாமன்', 'தடம்' ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'கலகத் தலைவன்' படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். அத்தோடு , பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலகத் தலைவன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.மேலும்  இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

எனினும் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்த நிலையில் இந்த திரைப்படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. இதனை ஒட்டி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரத்யேக போட்டி அளித்தார். அப்போது கலகத் தலைவன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பொங்கலுக்கு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தை அவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிகிறது.எனினும்  இந்த நிலையில், இதுகுறித்து பேசிய உதயநிதி அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் திரையில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது புதிதல்ல என்பதால் வாரிசு துணிவு திரைப்படங்கள், பொங்கல் தினத்தில் வெளியாவது பிரச்சினையாக இருக்காது என்று தெரிவித்தார்.

மேலும், அஜித்தின் துணிவு மற்றும் விஜய்-ன் வாரிசு என இரண்டு திரைப்படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைக்கும் என தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் துணிவு திரைப்படத்தை இன்னும் தான் பார்க்கவில்லை எனவும் விரைவில் பார்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement