• May 07 2024

வாரிசு படத்தை நள்ளிரவு திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டம்! ரசிகர்கள் கொண்டாட்டம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.

விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். 


பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார்.  இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.


இந்த நிலையில் முதல் காட்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள் நள்ளிரவு ஒரு மணிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சியை திரையிட திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement