• Feb 23 2025

மீண்டும் பிக் பாஸில் களமிறங்கும் உலக நாயகன்.. அப்போ மக்கள் செல்வனின் சோலி முடிஞ்சா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சேனல்களில் மக்களின் மனம் கவர்ந்த சேனல்களில் ஒன்றாக விஜய் டிவி காணப்படுகின்றது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றிற்கு மிகப் பெரிய வரவேற்பு ரசிகர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கிலும் உச்சநிலையை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இதன் காரணத்தினால் தொடர்ச்சியாக 8 சீசங்கள் வரை பயணித்துள்ளது.

d_i_a

முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் எட்டாவது சீசனில் ஆரம்பத்தின் போது தனக்கு இருக்கும் படப்பிடிப்பு வேலைகள் காரணமாக இதில் கலந்து கொள்ள முடியாது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.


இதை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்வி நிலவியது. அதற்கு சூர்யா, சிம்பு, அரவிந்த்சாமி, நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலரின் பெயர்கள் அடிபட்டது. ஆனாலும் இறுதியில் விஜய் சேதுபதி தான் இதற்கு தெரிவானார். தற்போது விஜய் சேதுபதி தலைமையில் இந்த சீசன் 50 நாட்களை எட்டியுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த முறை சீசனை கமலஹாசன் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. அவரால் அமெரிக்க சென்றதன் காரணத்தினால் தான் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை இதனால் அடுத்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக கோவை தங்கவேலு தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement