• Dec 04 2024

இறுதியாக எலிமினேட்டாகி மகிழ்ச்சியோடு சென்ற வர்ஷினிக்கு வாரிக் கொடுக்கப்பட்ட சம்பளம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த அக்டோபர் ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 50 நாட்களை எட்டி உள்ளது. ஆனாலும் இந்த சீசனில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்..

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

d_i_a

அதன் பின்பு ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். எனினும் இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறந்த கன்டென்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அது நடைபெறவில்லை.


தொடர்ந்து நேற்றைய தினம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த வர்ஷினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினெட் ஆகி வெளியே சென்று இருந்தார். அவர் ஏனையவர்களை போல் அல்லாமல் மகிழ்ச்சியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி சென்றார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் வர்ஷினி இருந்ததற்கான சம்பள விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரமா சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் 21 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்ததற்காக அவருக்கு இரண்டு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement